Wednesday 19 August, 2009

ஆரூரா... தியாகேசா...!!

திருவாரூர் ஆழித்தேரும் ஆயில்ய நக்ஷத்திரமும் !!


திருவாரூர் தேர்த்திருவிழாவானது தொன்று தொட்டு பங்குனி மாதம் ஆயில்ய நக்ஷத்திரத்தில் கொண்டாடப் படுவதாக சமய சான்றோர்களும், அப்பகுதியைச் சேர்ந்த பெரியவர்களும் தெரிவிக்கின்றனர். தொன்மையான சில குறிப்பேடுகளும் இந்த வி்ஷயத்தை உறுதிப்படுத்துகின்றன.

வழக்கம் போல பங்குனியில் கொண்டாடப் படவேண்டிய திருவாரூர் தேர்த் திரு்விழாவானது, இம்முறையும் தாமதப் படுத்தப்பட்டு ஆடி மாதம் தான் அரங்கேற்றப் பட்டுள்ளது. சில வருடங்களாகவே தி.மு.க அரசு இத்தேரினை பங்குனி தவிர மற்ற பிற மாதங்களில் ஓட்டி மகிழ்கிறது(?). இந்த தேர் சில காலம் ஓடாதிருந்து பின் ஓடத் தொடங்கியதற்கு ஹிந்து இயக்கங்கள் தான் காரணமேயன்றி, தி.மு.க அரசு அல்ல. அதற்கு தாங்கள் தாம் பொறுப்பென நா த்திகவாதிகள் பெருமை பேசினாலும் நமக்கு மகிழ்ச்சியே !! ஆனால், ஆலய விதிகளில் குறுக்கிட வேண்டாமெனத் தான் நாம் அவர்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

பிற மதத்தோர்க்கு நாள் மிக முக்கியம்; ஹிந்துக்களுக்கு நக்ஷத்திரம் (மற்றும் திதி) மிக முக்கியமானது.

இது என்ன என்றோ, இதனால் என்ன என்றோ நினைப்பவர்களுக்கு ஒரு சிறு உதாரணம். கிருஸ்தவர்கள் (டிஸம்பர் 25-ல்) கொண்டாடும் கி்ருஸ்துமஸ் பண்டிகையை ஜனவரியில் (ஏதோ ஒரு தேதியில்) தான் கொண்டாட வேண்டுமெனவும், அதுவும் அந்த தினம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒரு விடுமுறை நா ளாக (வியாபார நோக்கில்) இருக்க வேண்டுமெனவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பிப்பது போலத்தான் இதுவும்.

பகுத்தறிவுப் பகலவனால் நடத்தப்படும் இந்த அரசாங்கம் இதன் மூலம் சாதிக்க நினைப்பது என்னவென்று இன்னமும் விளங்கவில்லை.


பகுத்தறிவும், சில புரட்டுக்களும் !!

இது (ஒரே) ஒரு மதம் தொடர்பான விஷயம் (ஹிந்து மதம் என்பதால் தான் அரசு இவ்வளவு அராஜகம் செய்கிறதென்பது வேறு வி்ஷய்ம்); பிற மதங்களின் குறுக்கீடுகளோ நிர்ப்பந்தமோ அறவே கிடையாது; நடைபெறுவதோ பகுத்தறிவாளர்களின் ஆட்சி. இருப்பினும் எதற்காக அரசு இவ்வளவு முரண்டுபிடிக்கிறதென விசாரித்ததில், சில புரளிகளை செவி மடுத்தோம்.

ஏதோ ஒரு முறை ஆயில்யத்தில் தேரோட்டியதால், அவர்கள் ஆட்சி கவிழ்நது விட்டதாம். [ஆட்சி கவிழ்ந்ததன் உண்மையான காரணம் தேசவிரோதிகளுக்கு அவர்கள் செய்த உதவி என்றும், அதற்கும் ஆயில்யத்திற்கும் தொடர்பில்லை எனவும் விஷயமறிந்தவர்கள் சொல்கிறார்கள்). ஆயில்ய நக்ஷத்திரத்தில் தேரோட்டினால் ஆட்சியின் (ஆட்சியாளரின்) ஆயுளுக்கு பங்கம் வரலாமென்பதாலேயே அரசு அதை தவிர்க்கிறது என்பது பொது ஜனங்களிடையே பரவலான கருத்து.

இருப்பதுஒரு உயிர் தான் என்பதால், இப்புரட்டுக்களை நம்பாமல் ஆகம விதிப்படியே தேரோட, அரசு ஆவண செய்யுமென எதிர் பார்ப்போம்.


தில்லை அம்பலம் தொடர்ந்து, திருவாரூர் தேரில் தலையிடும் அரசியல்

திருவாரூரில், இதற்கென ஆழித்தேர் பக்தர்கள் பேரவை ஒன்று இயங்கி வருகின்றது. இதனோடு கூட சில ஹிந்து இயக்கங்களும், பல சிவ பக்தர்களும் (கட்சி பேதமின்றி) ஒன்று கூடி போராடுகின்றனர். இரண்டாண்டுகளுக்கு முன்பு டைபெற்ற போராட்டத்தில் ஒரு சிவ பக்தர் பாடிய பாடலை கீழே பதிந்திருக்கின்றேன்.

கலாச்சாரம், பண்பாடு சார் ஆன்மீக விஷயங்களில் அரசு தலையிடாதிருப்பதே உத்தமம். எடுப்பார் கைப்பிள்ளை போல, ஹிந்துக்களை இரண்டாந் தர குடி மக்களாக பாவிப்பதை ஏற்க முடியாது. இணைய தளங்களில் இது குறித்து அதிக தகவல்கள் இல்லை. ஒரு வேளை உங்களில் யாருக்கேனும் தெரிந்திருந்தால், மேலும் தெரிய விரும்பினால், தொடர்பு கொள்ளுங்கள். இது பற்றி உங்கள் தனிப்பட்ட கருத்துக்களையும் எழுதி அனுப்புங்கள்.

இது ஒரு வெகு ஜன இயக்கமாக வளரட்டும். தேர் தி்யாகேசனுக்காக ஓடட்டும்.


இரண்டாண்டுகளுக்கு முன்பு டைபெற்ற போராட்டத்தில் ஒரு சிவ பக்தர் பாடிய பாடல்.

ஆண்டவன் வகுத்த வழிமுறை தன்னை
ஆகமம் என்றே அனைவரும் அறிவர்

ஆகமம் காட்டும் நெறிமுறைப் படியே
ஆயில்ய நாளே ஆழித்தேர் நாளாம்


ஆரூரா... தியாகேசா...!!
ஆரூரா..... தியாகேசா.....!!!
ஆரூரா....... தியாகேசா.......!!!!!

ஆண்டவன் வகுத்த விதிமுறை தன்னை
ஆள்பவர் இன்று மீறுதல் முறையோ

ஆண்டவன் வகுத்த வழிமுறை தன்னை
ஆள்பவர் இன்று மீறிடும் போது

ஆள்பவர் வகுத்த விதிமுறை தன்னை
அடியவர் நாமும் மீறிடுவோமே

ஆரூரா... தியாகேசா...!!
ஆரூரா..... தியாகேசா.....!!!
ஆரூரா....... தியாகேசா.......!!!!!

பணிவுடன் எங்கள் கோரிக்கை கேளீர்
கணிவுடன் எங்கள் கோரிக்கை கேளீர்

அடுத்த ஆண்டில் ஆயில்ய நாளில்
ஆழித் தேர் ஓட உறுதியைத் தாரீர்

உறுதியை நாமும் பெறுகின்ற வரையில்
உறுதியாய்த் தொடர்ந்து போரிடுவோமே

ஆரூரா... தியாகேசா...!!
ஆரூரா..... தியாகேசா.....!!!
ஆரூரா....... தியாகேசா.......!!!!!

No comments: